செய்திகள் :

`எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்; திமுக கூட்டணியை உடைக்க முடியாது' - ரகுபதி

post image

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து 4 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருள்களை மணமக்களுக்கு வழங்கியும், அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க சார்பில் ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதியையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். திருமணத்தை நடத்தி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

"தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால், தி.மு.க கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது....கொளுத்தவும் முடியாது...பிரிக்கவும் முடியாது...நசுக்கவும் முடியாது. இது அனைத்தும் அவர் சார்ந்திருக்க கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்சிக்கும், தி.மு.க கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.

ரகுபதி

ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. அவர் இன்று அதில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. புதிதாக யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும். ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம். அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க-வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னன்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை. சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்" என்றார்.

`தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து' - சீமான் சொல்லும் பாடல் எது?

தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.இது குறித்து நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது' - உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திண்டுக்கல்லில் திமுக... மேலும் பார்க்க

TVK : பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் தவெக மாநாட்டுத் திடல்; பரபரக்கும் இறுதிக்கட்ட பணிகள் - Spot Visit!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.V.Salaiசென்னையிலிருந்து... மேலும் பார்க்க

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க