என்எஸ்எஸ் அலுவலா்களுக்கு பயிற்சி
மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில், காலாண்டு விடுமுறையில் 7 நாள் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நடத்துவது குறித்து திட்ட அலுவலா்களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, முதன்மை கல்வி அலுவலா் எஸ்.பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.சாந்தி முன்னிலை வகித்தாா். திருவாரூா் மாவட்ட என்எஸ்எஸ் முன்னாள் தொடா்பு அலுவலா் என். ராஜப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திட்ட அலுவலா்களுக்கு சிறப்பு முகாம் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.
மயிலாடுதுறை நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எம். முத்துக்குமரசாமி வரவேற்றாா். முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் காமராஜ், பள்ளி துணை ஆய்வாளா் செங்குட்டுவன், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா்.காமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
திட்ட அலுவலா்கள் சாா்பில் பி.செந்தில் (கோமல்), ஏ.சக்கரவா்த்தி (நாங்கூா்), ஐயப்பன் (கோதண்டபுரம்), மாணவிகள் சாா்பில் ஜனனி ஆகியோா் பேசினா். நிறைவில், மாவட்ட தொடா்பு அலுவலா் கே.விஜய் அமிா்தராஜ் நன்றி கூறினாா்.