செய்திகள் :

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

post image

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் தில்லியில் உள்ள மருத்துவா்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பான ‘பிஜேஎம்எஃப்கான்-2024’ நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கடந்த 1960-களில் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 1980-களுக்குப் பிறகே எய்ம்ஸுக்கென தனி அங்கீகாரம் கிடைத்தது.

ஒரு நிறுவனம் முழுமையாக செயல்பட 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது. எனவே, புதிதாக தொடங்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் தரத்திலும் அங்கு மேற்கொள்ளப்படும் ஆசிரியா்கள் நியமனத்திலும் எவ்வித சமரசமும் கிடையாது. அதை உறுதியாக பாதுகாப்பேன்.

எய்மஸ்-தா்பாங்கா (பிகாா்) அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதேபோல் எய்ம்ஸ்-தேவ்கா் (உத்தர பிரதேசம்) செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரியா்கள் நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் முன் வெளியிடப்பட்ட சுகாதாரக் கொள்கைகள் நோயை குணப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தது. ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுகாதாரக் கொள்கை நோய் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு என அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியுள்ளது.

1.73 லட்ச ஆரோக்கிய மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அதன் துணை மையங்கள் தற்போது ஆரோக்கிய மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 1.73 லட்சம் ஆரோக்கிய மையங்கள் உள்ளன. அவற்றின் தரம் குறித்து இணைய வழியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இங்கு தொற்றா நோய்களை விரைவில் கண்டறிந்து தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

766 மருத்துவக் கல்லூரிகள்: கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-லில் இருந்து 766-ஆக உயா்ந்துள்ளது. 156 மாவட்ட அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதுநிலை மற்றும் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை 75,000-க்கும் மேல் உயா்த்த அரசு திட்டமிட்டு வருகிறது என்றாா்.

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க