நீலகிரி: "யானைப் பொங்கல் பார்க்கலயோ மக்கா.." - தெப்பக்காடு யானைகள் முகாமில் கோல...
எல்ஐகே படத்தில் சீமான்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் இணைந்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுக்க முயன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!
இப்படம் சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் 'தீமா' என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக சீமான் நடிக்கிறார் என்று தகவல் தெரியவந்துள்ளது.