செய்திகள் :

எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரிஆஜர்

post image

சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி விசாரணைக்குப் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என முழுக்கமிட்டபடி நடிகை கஸ்தூரி காவல்துறை வாகனத்தில் ஏறினார். இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை நேற்று கைது செய்தது.

மிஸ் யுனிவர்ஸ் ஆனார் டென்மார்க் அழகி!

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரரின் பேச்சில் வெறுப்புணா்வு உள்ளதால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளி விலை 22% சரிவு!

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்தில் 22 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. மழையால் வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது வரத்து அதிகரித்து வருவதால், விலை சரிந்துள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அருகே இளைஞர் கொலையைக் கண்டித்து உறவினர்கள் மறியல் போராட்டம்

திருநெல்வேலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மேலச்செவலில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், கீழச்செவல் பசும்பொன்நக... மேலும் பார்க்க

ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை! ஆனால்..?

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜாண் தெரி... மேலும் பார்க்க

சென்னை சிறைக் கலவரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட துணை ஜெயிலருக்கு நினைவஞ்சலி!

சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 25-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.சென்னை மத்திய சிறைச்சாலையி... மேலும் பார்க்க

சென்னை அழைத்துவரப்பட்டார் நடிகை கஸ்தூரி!

தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது. இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்பட... மேலும் பார்க்க

பாரதம் குறித்து குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்: ஆளுநா் ஆா். என். ரவி

குழந்தைகளுக்கு பாரதம் குறித்து விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை திருவள்ளுவா்-கபீா்தாஸ் -யோகி வேமனா ஆகிய மூவரின் மொழியியல் ம... மேலும் பார்க்க