காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
எஸ்ஏ20 விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் பலனடைகிறது: ரஷித் கான்
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் வளர்ச்சியடைகிறது என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் (எஸ்ஏ20) ஜன.9ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மும்பை கேப்டௌன் அணிக்கு கேப்டனாக செயல்படவிருக்கிறார் ரஷித் கான்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டௌன் 2 சீசன்களாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலே இடம் பிடித்தது. தற்போது கேப்டனாக ரஷித் நியமிக்கப்பட்டுள்ளதால் புதிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளார்கள்.
சமீப காலமாக ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வருகிறது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சென்றார்கள்.
ரஷித் கான் இது குறித்து கூறியதாவது:
10 வருடங்களுக்கு முன்பு இப்படி நினைக்கவில்லை
இதுமாதிரியான (எஸ்ஏ20) தொடர்கள் கிரிக்கெட்டை இன்னும் மேம்படுத்துகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்குவந்து பங்கேற்பதால் ஆப்கன் கிரிக்கெட் வளர்ச்சியடைகிறது.
டி20, ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடிய விதம் பிடித்திருந்தது. 10 வருடங்களுக்கு முன்பு யாரும் எங்களை அரையிறுதியில் வருமோமென நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இது மாதிரியான பெரிய தொடர்களில் விளையாடி அதற்கான வாய்ப்புகளை பெறுகிறோம்.
அஜமதுல்லா, குர்பாஜ், நூர், நவின் என செய்தியாளர்கள் குறிப்பிட்டபடி அனைவரும் இங்கு வந்து விளையாடியதால்தான் பெரிய போட்டிகளில் வெல்கிறார்கள். மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களுடன் விளையாடும் வாய்ப்பு ஆப்கானிஸ்தானில் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது.
சூப்பர்ஸ்டார்களுடன் பழகும் வாய்ப்பு
மிகப்பெரிய வீரர்களுடன் ஓய்வறையை பகிர்ந்துள்ள இங்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிகிறது. அப்படித்தான் கிரிக்கெட் வளர்கிறது. அது ஆப்கன் கிரிக்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நாங்கள் நினைதத்துபோல ஐசிசி போடிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை.
எல்லாவற்றுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. லீக் போட்டிகள் விளையாடுவதால்தான் எங்களது கிரிக்கெட் திறமைகள் உயர்ந்துள்ளன.
இளைஞர்கள் பெரிய லீக் போட்டிகளில் பங்கேற்று தங்களை மேம்படுத்திக் கொள்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.