செய்திகள் :

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

post image

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப்பும் எதிர்த்து வருகிறது. இதனால் அவ்வப்போது ஏமனின் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், நேற்று ஹூதிகள் தலைமையில் ஏமனில் இருக்கும் சில இடங்களில் வான்வழி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையமும் அடங்கும்.

அந்தத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பித்திருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ். டெட்ரோஸ் தனது ஐ.நா சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் சகாக்களோடு ஏமனில் இருந்து கிளம்ப சனா விமான நிலையத்திற்கு சென்றபோது தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டுள்ளதாவது, "ஏமனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஐ.நா சபை அதிகாரிகளின் விடுதலை மற்றும் ஏமனின் சுகாதாரம் மற்றும் மனிதநேயம் சம்பந்தமான பேச்சுவார்த்தை இன்று முடிவுற்றது. ஐ.நா சபை அதிகாரிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு இப்போது கூறி வருகிறோம்.

நாங்கள் சனா விமான நிலையத்தில் விமான ஏறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, விமான நிலையம் வான்வழி வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகியது. இதில் எங்களுடைய விமானி குழுவில் ஒருவர் காயமடைந்தார். மேலும், அந்த விமான நிலையத்தில் இந்த தாக்குதலால் குறைந்தபட்சம் இரண்டு பேராவது உயிரிழந்திருப்பார்கள். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த ஏர் டிராபிக் கன்ட்ரோல் டவர், புறப்படும் லாஞ்ச், ரன்வே உள்ளிட்ட பல இடங்கள் தாக்குதலால் சேதம் அடைந்தது.

அந்த சேதங்கள் சரி செய்யப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.

நானும், எனது ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு சகாக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

பாமக: `நான் சொல்வதுதான் முடிவு’ சீறிய ராமதாஸ் ; மைக்கை வீசிய அன்புமணி - கருத்து மோதலின் பின்னணி?

அப்செட் அன்புமணி!ராமதாஸ் அறிவிப்பு...புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.க-வின் சிறப்பு மாநில பொ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஜனவரி 12-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் ஏன்?’ – அமைச்சர் சொல்வதென்ன ?

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தே... மேலும் பார்க்க

'புதிய சர்கஸ் கம்பெனியால், பழைய சர்கஸ் கோமாளிகள் வேடம் அணிகிறார்கள்' - டி.ஆர்.பி ராஜா

திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி... மேலும் பார்க்க

Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசிய பிரதமர் இப்ராஹிம்

இந்திய வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இவரின் மறைவுக்கு உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன் சிங்கின் தன்மையான ஆளுமையும் அ... மேலும் பார்க்க

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?""நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ... மேலும் பார்க்க