செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச்சந்தை! மத்திய பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்துமா?

post image

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பங்குச்சந்தை ஏற்றமடைந்து வரும் நிலையில், காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 417.12 புள்ளிகள் அதிகரித்து 77,176.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.5 புள்ளிகள் உயர்ந்து 23,398.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

இதையும் படிக்க | ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!

எல்&டி, டைட்டன், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

சன் பார்மா, ரிலையன்ஸ், எம்&எம், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஐடி துறைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில் உலோகத் துறை சரிந்து வருகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் இன்று 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(ஜன. 31) பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில், சென்செ... மேலும் பார்க்க

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! புதிய உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு சிறிது ஏற்றம், ... மேலும் பார்க்க

53% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

கடந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியி... மேலும் பார்க்க

கோரமண்டல் இன்டா்நேஷனல் வருவாய் 28% அதிகரிப்பு!

கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் வருவாய் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 28 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

ரூ. 61,000-ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 61,000-ஐ நெருங்கியுள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி ரூ.60,000-ஐ கடந்து வரலாற்று உச்சம் அடைந்தது. அதன்பிறகு சிறிது ஏற்றம், இறக்கம் இருந்தால... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 22 சதவிகிதம் சரிவடைந்து ரூ.5,578 கோடி ஆக சரிந்துள்ளது.இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பங்குச் சந்தையி... மேலும் பார்க்க