ஏற்றத்துடன் தொடங்கி சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!
வாரத்தின் 2வது நாளான இன்று இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது.
வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வணிகம் தொடங்கினாலும், புதிய முதலீடுகள் இல்லாததால் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 105 புள்ளிகளும் நிஃப்டி 24200 புள்ளிகளுக்கு கீழும் குறைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 105.79 புள்ளிகள் சரிந்து 80,004.06 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.13 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.40 புள்ளிகள் சரிந்து 24,194.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.11 சதவீதம் சரிவாகும்.