நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!
ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.
ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!
இந்த விருதுக்கான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணி வீராங்கனை கொங்கடி த்ரிஷா உள்பட மூவர் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் கரிஷ்மா ராம்ஹரக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி இருவரும் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் கொங்கடி த்ரிஷா சிறப்பாக விளையாடினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய கொங்கடி த்ரிஷாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கப்பட்டது.