ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை வென்றார் சதர்லேண்ட்!
ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் வென்றுள்ளார்.
ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை தவிர்த்து, இந்த விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் நான்குலுலேகோ மிலாபாவும் இடம்பெற்றிந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா டிசம்பர் மாதத்துக்கான ஐசிசி விருதை வெல்லுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அன்னாபெல் சதர்லேண்ட் வென்று அசத்தியுள்ளார்.
ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!
டிசம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட அந்த அணியின் வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் முக்கிய காரணமாக அமைந்தார்.
ஆல்ரவுண்டரான இவர் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார். இந்தியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் 110 ரன்கள் மற்றும் வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 105 ரன்களும் அவர் எடுத்தார்.
பேட்டிங்கில் மட்டுமின்றி அன்னாபெல் பந்துவீச்சிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய அவர், 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சிறப்பான செயல்பாடுகள் டிசம்பர் மாதத்தில் அவருக்கு இரண்டு தொடர் நாயகிகள் விருதினைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி சிறந்த வீராங்கனை விருதை பெற்றுத்தந்துள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்!