செய்திகள் :

ஐசிசி தரவரிசை: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் முன்னேற்றம்!

post image

ஐசிசியின் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(மார்ச் 5) வெளியிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க: சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்! -விராட் கோலி

அதன்படி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 177 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸ்த்ரான் அதிரடியாக 13 இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களை எட்டியுள்ளார். அதேவேளையில் இந்திய அணி கேப்டன் 2 இடங்கள் சரிந்து 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க: திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்கள்

  1. ஷுப்மன் கில் -791 புள்ளிகள்

  2. பாபர் அசாம் - 770 புள்ளிகள்

  3. ஹென்ரிச் கிளாசன் -760 புள்ளிகள்

  4. விராட் கோலி - 747 புள்ளிகள்

  5. ரோஹித் சர்மா -745 புள்ளிகள்

  6. ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்

  7. டேரில் மிட்செல் -705 புள்ளிகள்

  8. ஸ்ரேயாஸ் ஐயர்-702 புள்ளிகள்

  9. சரித் அசலங்கா -694 புள்ளிகள்

  10. இப்ராஹிம் ஸ்த்ரான் - 676 புள்ளிகள்

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றுவந்த 9-வது ச... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் அறிவித்துள்ளார்.ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரஹிம், தொடர்ந்து டெ... மேலும் பார்க்க

நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் பார்க்க

2-வது அரையிறுதி: டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அ... மேலும் பார்க்க

சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்! -விராட் கோலி

சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய... மேலும் பார்க்க