அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இதையும் படிக்க : ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியது: காங்கிரஸ்
அந்த கட்சியின் உறுப்பினரும் மத்திய இணையமைச்சருமான சந்திரசேகர் பெம்மசனி பேசியதாவது:
“தேசக் கட்டமைப்பு முன்னெடுப்புகளுக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற இலக்குடன் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆந்திரம் 2047 என்பதை இணைத்து கூட்டாட்சியில் ஒருங்கிணைந்து வளர்சிக்கு ஒத்துழைக்கிறோம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் பல சாதகமான விஷயங்கள் உள்ளன. போக்குவரத்து செலவு குறையும், 2024-இல் ரூ. 10,000 கோடிக்கு அதிகமாக செலவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் 40 சதவிகிதம் செலவு குறையும், வாக்காளர்கள் சதவிகிதம் 7 சதவிகிதம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. கட்சிகளுக்கு செலவு குறையும், ஆட்சி நிர்வாகத்தில் தொடர்ச்சி இருக்கும்” எனத் தெரிவித்தார்.