வார்த்தை தவறிய STALIN... அட்டாக் மோடில் PMK... வலை வீசும் EPS! | Elangovan Expla...
ஓப்பனிங்கில் அசத்தும் கே.எல்.ராகுல்! தனது இடத்தை விட்டுக்கொடுப்பாரா ரோஹித் சர்மா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், இந்திய அணியின் கேப்டனும், பிரதான தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியினருடன் இணைந்துள்ளதால் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுடன் யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தின் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியினர் 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்.
திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இருப்பினும், குழந்தை பிறந்திருப்பதால், விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மாவின் இடத்தில் கே.எல்.ராகுல் விளையாடினார்.
முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தாலும் 26 ரன்னில் சர்ச்சையான முறையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். மேலும் 77 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணி வெளிநாடுகளில் முதல் விக்கெட்டுக்கு அமைத்த மூன்று 100 ரன்கள் பாட்னர்ஷிப்பில் ராகுல் மட்டும் பொதுவானவராகப் பங்களித்துள்ளார்.
அதிக விலைக்கு ஏலம்போன டாப் 10 வீரர்கள்; முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள்!
புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடும் ராகுல், வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், 5, 6-வது வரிசையில் மிகவும் தடுமாறி வருகிறார். கேப்டன் ரோஹித்தின் வருகை அவரது தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு மீண்டும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் விளையாடுவது உறுதியானது தான் என்றாலும், கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ரோஹித், ராகுல் இருவரில் யார் தொடக்க ஆட்டக்காரர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. மூன்றாவது இடத்தில் விளையாடும் காயத்தால் விலகியுள்ள சுப்மன் கில்லுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஐபிஎல் மெகா ஏலம்: 10 அணிகளின் வீரர்களும், ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையும்!
ரோஹித் சர்மாவை 5 அல்லது 6 வது வரிசையில் விளையாட வைக்க இந்திய அணியினர் யோசித்து வருகின்றனர். ரோஹித் சர்மா கடந்த 5 வருடங்களாக தொடக்க ஆட்டக்காரராக மட்டுமே விளையாடி வருகிறார்.
காயத்தில் இருந்து மெதுவாக மீண்டும் வரும் கில் விளையாடவந்தால், துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடிலெய்ட் மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட்டில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.