இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!
ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!
காஃபா நேஷன்ஸ் கால்பந்தாட்டத்தில் இந்திய அணி, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. உலகப் பட்டியலில் தன்னைவிட முன்னிலையிலுள்ள ஓமனை வீழ்த்தி இந்தியா மூன்றாமிடம் பிடித்தது.
காஃபா நேஷன்ஸ் கால்பந்து போட்டியில், முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் ஓமனும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் கணக்கில் சமனில் இருந்ததால், பெனால்ட்டி ஷூட் வைக்கப்பட்டது. அதில் இந்தியா 3 - 2 என்ற எண்னிக்கையில் அதிக கோல் அடித்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காஃபா நேஷன்ஸ் கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.