செய்திகள் :

ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் எப்படி? கபில் தேவ் விமர்சனம்

post image

இந்திய வீரர்கள் ஓராண்டில் 10 மாதங்களும் விளையாடினால் காயம்தான் ஏற்படுமென கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் என்சிஏ (தேசிய கிரிக்கெட் அகாதெமி) காயமடைந்தவர்களின் முகாந்திரமாக மாறி வருகிறது.

பிஜிடி தொடரில் சிட்னியில் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதனால் அந்தத் தொடரை இழந்த இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடமாட்டார் என்ற அதிர்ச்சி மேலும் நிலை குலைய செய்தது.

ஷமி காயத்தினால் ஓராண்டு விளையாடாமல் இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பிப்.22ஆம் தேதி மோதுகிறது.

இந்த நிலையில் கபில் தேவ் கூறியதாவது:

இந்திய வீரர்கள் ஓராண்டுக்கு 10 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுவதுதான் என்னை கவலைக்குள்ளாக்குகிறது. அதனால்தான் காயம் அதிகமாக ஏற்படுகிறது.

அணியில் இல்லாதவர்களைக் குறித்து ஏன் பேச வேண்டும்? இது குழுவிற்கான போட்டி. தனி மனிதர்களுக்கானது அல்ல. இது டென்னிஸ், பாட்மின்டன், கோல்ப் போன்றது இல்லை. ஆனால், எதாவது நடந்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்திய அணிக்கு வாழ்த்துகள். நன்றாக விளையாடுங்கள்.

இளைஞர்களை பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. நாங்கள் இளைஞர்களாக இருக்கும்போது அந்தளவுக்கு நம்பிக்கையுடன் இல்லை. அவர்களுக்கு வாழ்த்துகள்.

கிரிக்கெட் விளையாடவில்லை எனில் கோல்ப் விளையாட செல்லுங்கள். அதில் நல்ல அனுபவம் கிடைக்கிறது என்றார்.

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன... மேலும் பார்க்க

1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்த வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்பியன்ச் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற முகமது... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். 25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாது... மேலும் பார்க்க

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொட... மேலும் பார்க்க

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து மோதல்

கராச்சி/துபை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது சீசன், பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்குகிறது.கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து ... மேலும் பார்க்க