செய்திகள் :

கங்குவா இசை வெளியீட்டுத் தேதி!

post image

கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: திரில்லர் படமாக உருவாகும் சூர்யா - 45?

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாகத் தகவல்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாமோஸ் பிரிங்கார் பேப்’ என்கிற இரண்டாவது பாடலை அக். 21 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற அக். 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்.

மனசாட்சி என்றால் என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனசாட்சி என்றால் என்ன? மனசாட்சியுடன் விளையாடுவது என்றால் என்ன? என்ற கேள்வி பெரிதாக வெடித்துள்ளது.வார இறுதியில் விஜய் சேதுபதியுடனான உரையாடலின்போது முத்துக்குமரன் எழுப்பிய இந்தக்... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: சக போட்டியாளர்களால் மனமுடைந்த நடிகர் அர்ணவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் நடிகர் அர்ணவ் மனமுடைந்து நிற்கும் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அனைத்து மட்டமான விருதுகளும் அர்ணவுக்கே பொருந்தும் என... மேலும் பார்க்க

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்?

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள... மேலும் பார்க்க

வேட்டையன் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.கலவையான வி... மேலும் பார்க்க

வீர தீர சூரனில் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி!

வீர தீர சூரன் படத்தின் சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடி... மேலும் பார்க்க

பிளாக் வசூல்!

ஜீவா நடித்த பிளாக் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருந்தாலும் வெற்றிப்... மேலும் பார்க்க