செய்திகள் :

பணி நியமனம் கோரி மருத்துவ தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளா்களாக நியமிக்க வலியுறுத்தி, பேறுகால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் 350-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் டாக்டா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005-ஆம் ஆண்டு முதல் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் ஒரு பகுதி தூய்மை பணியாளா்கள், தற்காலிக பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளா்களாக பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால், அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே, இதில் விடுபட்டவா்களையும் பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளா்களாக நியமனம் செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும். அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்றாா் அவா்.

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் விற்ற 6 போ் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்த 6 பேரைக் கைது செய்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை மாதவரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்கப்படுவதாக அரும்... மேலும் பார்க்க

குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது மற்றும் தனியாா் காலியிடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க