செய்திகள் :

கஜினி - 2: சூர்யா, அமீர் கான் தயார்?

post image

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 வெளியான திரைப்படம் கஜினி. இதில், நாயகனாக சூர்யாவும் நாயகியாக அசினும் நடித்திருந்தனர்.

காதலிப்பவர்களுக்கு இடையேயான உறவு, மறதிகொண்ட நாயகன் வில்லன்களைப் பலிவாங்கும் காட்சிகள் என பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் உருவாகியிருந்தது.

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில் 2008 ஆம் ஆண்டு அமீர் கானை நாயகனாக வைத்து இதே கதையை ஏ. ஆர். முருகதாஸ் ரீமேக் செய்திருந்தார். அங்கும் இப்படம் அட்டகாசமான வெற்றியைப் பெற்று பாலிவுட் பிளாக்பஸ்டரானது.

இதையும் படிக்க: ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சொர்கவாசல் டீசர்!

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹிந்தியில் மது மண்டேனாவும் தமிழில் அல்லு அர்விந்தின் நிறுவனமும் தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு கஜினி - 2 படத்திற்கான ஒன்லைன் கதையை அமீர் கான் தயார் செய்ய சொன்னதாகவும் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் தமிழிலும் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு பிணை கிடைத்துள்ளது. நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டா... மேலும் பார்க்க

100ஆவது பட்டத்துக்கான காத்திருப்பு..! பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகிய ஜோகோவிச்!

செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதை ஜோகோவிச் அறிவித்தார். அதில் கூறியதாவது: இந்தாண்டு நடைபெறும் ரோ... மேலும் பார்க்க

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு!

இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.16 ஆண்டுகளாக சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் தனது தந்தையின் தொழ... மேலும் பார்க்க

பனி - இயக்குநராக வென்றாரா ஜோஜு ஜார்ஜ்? ரசிகர்கள் கருத்து!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய பனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன... மேலும் பார்க்க

புஷ்பா - 2 புதிய வெளியீட்டுத் தேதி!

புஷ்பா - 2 திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.குறிப்... மேலும் பார்க்க

வேட்டையன் சப்வே சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ!

வேட்டையன் திரைப்படத்தின் சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் அக்.10 ஆம் தேதி வெளியானது.... மேலும் பார்க்க