"பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்" - டெல்...
கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையா் பொறுப்பேற்பு
கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராக எஸ்.சங்கரபாண்டியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றிய முரளிதரன் பணி மாறுதலில் சென்றதையடுத்து, மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றிய எஸ். சங்கரபாண்டியன் கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவருக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.