Royal Enfield Scram 440: அதிக பவர், கூடுதல் அம்சங்கள் First Look & Features Expl...
கடலூரில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
நெய்வேலி: கடலூா் துறைமுகம் சங்கரன் தெருவில் கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அதே பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பு அணிகளின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கடலூா் கடற்கரைச் சாலையில் உள்ள சி.கே. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 50 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.ஒரு லட்சம் செலவில் இணைப்புச் சக்கரம் பொருத்திய மூன்று சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கினாா்.
ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேல் புவனகிரி, கம்மாபுரம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், விருத்தாசலம் உதவி இயக்குநா் அலுவலகக் கட்டடம், கடலூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகக் கட்டடப் பணிகளை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்.