செய்திகள் :

கடைசி ஒருநாள்: சதம் விளாசிய கம்ரான் குலாம்; ஜிம்பாப்வேவுக்கு 304 ரன்கள் இலக்கு!

post image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (நவம்பர் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

இதையும் படிக்க: கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

சதம் விளாசிய கம்ரான் குலாம்

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் ஆயுப் மற்றும் அப்துல்லா சஃபீக் களமிறங்கினர். சைம் ஆயுப் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அப்துல்லாவுடன் ஜோடி சேர்ந்தார் கம்ரான் குலாம். இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு ரன்கள் சேர்த்தனர். அப்துல்லா சஃபீக் 68 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய கம்ரான் குலாம் சதம் விளாசி அசத்தினார். அவர் 99 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களில் கேப்டன் முகமது ரிஸ்வான் (37 ரன்கள்), சல்மான் அகா (30 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தயாப் தாஹிர் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: 7 மே.இ.தீவுகள் அணி வீரர்கள் சிஎஸ்கே முகாமில் பயிற்சி!

ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் ரிச்சர்டு நிகரவா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிளெஸிங் முஸர்பானி மற்றும் ஃபராஸ் அக்ரம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (நவம்பர்... மேலும் பார்க்க

நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

ஐபிஎல் கோப்பையை தானும், தில்லி கேபிடல்ஸும் ஒன்றிணைந்து வெல்வோம் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் நிறைவடைந்தது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைய... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.கான்பெராவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ... மேலும் பார்க்க

கேன் வில்லியம்சன் அரைசதம்; முதல் நாளில் நியூசி. 319 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண... மேலும் பார்க்க