செய்திகள் :

கன்னியாகுமரி: மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; மேயர் முன்னிலையில் மோதல்... நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே உள்ள ஞானம் ஊராட்சி பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின் மயானம் அமைய உள்ள இடத்தை பார்வையிட சென்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மகேஷ் முன்னிலையில் சிலர் மோதிக்கொள்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க கிளை செயலாளர் ஜெகதீஷ், "ஞானம் ஊராட்சியில் காரியான்கோணம் பகுதியில் பத்து கோடி ரூபாய் செலவில் மின்சார சுடுகாடு அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஞாலம் ஊராட்சியில் உள்ள 14 கிராமங்களுக்கும் சுடுகாடு, இடுகாடு வசதிகள் உள்ளன. காரியான்கோணம் பகுதியானது முக்கடல் அணை அருகே உள்ளது. இந்த பகுதி உயர்ந்த மண் திட்டு போன்ற பகுதியாகும். மின் மயானம் திட்டத்தின் பெயரில் சிலர் அங்குள்ள மண்ணை கொள்ளையடிக்க முயல்கின்றனர். எனவே அந்த பகுதியை பார்வையிட்டு மக்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நாகர்கோவில் மேயர் மகேசிடம் ஊர்மக்கள் சார்பில் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

மேயர் முன்னிலையில் நடந்த மோதல்

மேயர் அந்த இடத்துக்கு வந்த சமயத்தில் அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். வீடியோ எடுக்கக்கூடாது என தி.மு.க ஒன்றியச் செயலாளர் பிராங்கிளின் ஒருவர் மொபைல் போனை வாங்கிப் பறித்தார். இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் சிலர் சமாதானப்படுத்தினர். மேயரால் எந்த பிரச்னையும் இல்லை. ஒன்றியச் செயலாளர் பிராங்கிளின் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுத்தினார். மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" என்றார்.

ஆய்வுக்கு சென்ற மேயர் மகேஷ்

இது குறித்து தோவாளை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பிராங்கிளினிடம் பேசினோம், "ஊர் பொதுமக்கள் அழைத்துதான் மேயர் மகேஷ் அங்கு வந்திருந்தார். பேச்சுவார்த்தையின்போது பல விஷயங்கள் பேசுவார்கள் என்பதால் யாரும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டாம் எனக்கூறினேன். ஆனால், சிலர் வேண்டும் என்றே வீடியோ எடுத்து பிரச்னை செய்தனர். இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதன் பின்னணியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்" என்றார்.

`தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து' - சீமான் சொல்லும் பாடல் எது?

தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.இது குறித்து நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது' - உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திண்டுக்கல்லில் திமுக... மேலும் பார்க்க

TVK : பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் தவெக மாநாட்டுத் திடல்; பரபரக்கும் இறுதிக்கட்ட பணிகள் - Spot Visit!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.V.Salaiசென்னையிலிருந்து... மேலும் பார்க்க

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க