செய்திகள் :

``கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?" - பொதுக்குழுவில் 2026 டார்கெட் வைத்த எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட விவகாரங்களில் தி.மு.க அரசைக் கண்டித்தும், டங்ஸ்டன் சுரங்கம், இந்தித் திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தியும் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக செயற்குழு - பொதுக்குழு

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ``2021 சட்டமன்ற தேர்தலில் 1,98,369 வாக்குகள் குறைவாகப் பெற்ற காரணத்தினால் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஏதோ பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறவில்லை. 525 பொய் அறிவிப்புகளை வாரி விட்டார்கள். இந்தியாவில் வேற எந்த கட்சி இப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றியதில்லை. இன்றைக்கு தி.மு.க தனது 43 மாத கால ஆட்சியில் 3.90 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். இவ்வளவு கடன் வாங்கியும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

525 அறிவிப்புகளில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், முதலமைச்சரும் அமைச்சர்களும் பேசுகின்றபோது 98 சதவிகிதம் நிறைவேற்றி விட்டதாக பொய் செய்திகளை பரப்புகிறார்கள். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால், அரசு ஊழியர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக தி.மு.க போராட்டங்களை சந்தித்து வருகிறது.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என தினமும் 10 கோடி ரூபாய் தி.மு.க-வுக்கு சென்று கொண்டிருக்கிறது. வருடத்துக்கு 3,600 கோடி ரூபாய் தி.மு.க அரசு இதில் ஊழல் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றம் 100 நாள்கள் நடைபெறும் என்றார்கள். ஆனால், இதுவரைக்கும் 113 நாள்கள்தான் சட்டமன்றத்தை கூட்டியிருக்கிறார்கள். இப்போது இரண்டே நாளில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்தி சாதனை படைத்திருக்கிறது தி.மு.க. சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்கள். ஆனால், நான் பேசுகின்ற போது, நமது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற போது கட் செய்து விடுகிறார்கள்.

ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் 2026 தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க வெற்றி பெறும் என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன அந்த கதையாக இருக்கிறது ஸ்டாலின் சொல்வது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்று சந்தி சிரிக்கிறது. ஆனால், தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்வதேயில்லை. உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை. ஃபெஞ்சல் புயலில் சென்னையில் எட்டு சென்டி மீட்டர் மழைதான் பெய்தது. ஆறேழு மணிநேரங்களில் அதுவே தானாக வடிந்து விடும்.

அதிமுக - எடப்பாடி பழனிசாமி

ஆனால், 24 மணி நேரத்தில் சென்னை மாநகர வீதிகளில் வீடுகளில் இருக்கும் நீர் எல்லாம் அகற்றப்பட்டு விட்டது என்று பேட்டி கொடுக்கிறார் ஸ்டாலின். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்த மழை நீரை 24 மணி நேரத்தில் அகற்றவேண்டியது தானே. தூத்துக்குடி, திருநெல்வேலியில் எல்லா வீடுகளும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

எனவே, ஜனவரி மாதம் இறுதியில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன். 2026-ல் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரைக்க வேண்டும். இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் சொன்னார்கள் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்கும். கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா... மன்னராட்சியில்தான் இதுபோல நடக்கும். கருணாநிதி இறந்த பிறகு அவரின் மகன் ஸ்டாலின் முடிசூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசைக் கொண்டு வந்து முடிசூட்டுகிறார். தி.மு.க-வினரே நொந்து விட்டார்கள் தி.மு.க அமைச்சர்கள் முகத்தில் பிரகாசமே இல்லை.

கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி

கருணாநிதி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் துணை முதலமைச்சர் பதவி கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் அவரை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். பிறகு அமைச்சராக்கினார்கள். இப்போது துணை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தி.மு.க வந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும். அப்படிப்பட்டவர்கள் 2026-ல் மக்களால் மாற்றிக் காட்டப்படுவார்கள்." என்று கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Aadhav Arjuna:`வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக்கூடாது என..' - வி.சி.க-விலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா

வி.சி.க விலிருந்து ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெறுநர்; எழுச்சித் தமிழர் திரு.... மேலும் பார்க்க

'முதலமைச்சர் எந்த உலகத்தில் வாழ்கிறார் என தெரியவில்லை' - வானதி சீனிவாசன்

Vvvபாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கூறுகையில், “மக்கள் பிரச்னைகளை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்ற சட்டசபைகூட்டத்தொடர்நாள்களை குறைத்தது ஏமாற்றமளிக்கிறது.வான... மேலும் பார்க்க

அமெரிக்கா: உறுதிப்படுத்திய டொனால்டு ட்ரம்ப்; 18,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!

அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இன்னும் ஒரு மாதத்தில் பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் செயல்முறைக்கு அவர் உறுதியளித்துள்ளதால்,... மேலும் பார்க்க

`டங்ஸ்டன், இந்தி திணிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு'- அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. வானகரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் நடவடிக்கைகள், விலைவாச... மேலும் பார்க்க

EVKS இளங்கோவன்: 'திமுக-வுடனான பகையும், உறவும்'

அதிரடி அரசியல்பெரியாரின் பேரன், ஈவிகே.சம்பத்தின் மகன் என பெரும் அடையாளங்களுடன் அரசியல் களத்துக்கு வந்தவர்தான் ஈவிகேஎஸ்.இளங்கோவன். கூடவே அதிரடி அரசியலுக்கும் சொந்தக்காரர். முதல் முறையாக 1984 சட்டமன்ற த... மேலும் பார்க்க