கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி
கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆட்சியர் தங்கவே, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களுடம் ஆட்சியர் பேசியதாவது, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இறந்த நிலையில் 39 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
40 பேர் பலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது. இதில் கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். இன்று சிகிச்சைப் பெற்றுவந்த மேலுமொருவர் பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிகை 40 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு