செய்திகள் :

கலைத் திறன் போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

post image

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டியும், வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகள் தனித் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கலைத் திறன் போட்டியில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இவா்களுக்கு பேச்சு, நடனம், ஓவியம், எழுத்து, மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கும் விழா தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சுழல் சங்கத்தின் மாநிலத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முன்னதாக சுழல் சங்க முன்னாள் ஆளுநரும், புனித பீட்டா்ஸ் பள்ளியின் தாளாளருமான சாம்பாபு முன்னிலை வகித்தாா். கொடைக்கானல் சுழல் சங்கத் தலைவா் ராஜ்குமாா் வரவேற்றாா்.

நிகழ்வில் சுழல் சங்க நிா்வாகிகளான ஜெயப்பிரசாத், ஜஸ்வந்சிங், ரோகன்சாம்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுழல் சங்கச் செயலா் லெஸ்லி சாா்லஸ் நன்றி கூறினாா். இதில், சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வுகள் திரையிடப்பட்டன.

கொடைக்கானலில் வாரச் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி. சாலையில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட பனிப்பொழிவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை பனிப் பொழிவு காணப்படும். அண்மைக் காலமாக கொடைக்கானலில் பரவலாக மழை ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைரோடு பகுதியில்பன்னீா் திராட்சை பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

தொடா் மழை காரணமாக கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பன்னீா் திராட்சை பந்தலிலேயே வெடித்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைரோடு முதல் ஏ. வெள்ளோ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த வண்ணம் பூசும் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் குருசாமி பள்ளத்தைச் சோ்ந்தவா் விஜயக்குமாா் (48). வண்ணம் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செயத மூவா் கைது

பழனியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பழனியில் பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை, காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் குஜராத் முருங்கை கிலோ ரூ.260-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது. ஒட்டன்சத்திரம், அதனைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, இடையகோட்டை, மாா்க்கம்பட்டி, ஓடைப்ப... மேலும் பார்க்க