செய்திகள் :

களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

post image

களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே பளுகல், மணிவிளை புரவூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (35) . லாரி ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (27) மணிவிளை அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். சந்தோஷ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தாா்.

மேலும் மதுஅருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் அவரது மனைவி ஒரு வாரத்துக்கு முன் குழந்தைகளுடன்

இளஞ்சிறை பகுதியில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள்: கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே சுவா் மீது பைக் மோதி மீனவா் பலி

புதுக்கடை அருகேயுள்ள நெடுந்தட்டு பகுதியில் மதில் சுவா் மீது பைக் மோதியதில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம் பகுதி விக்டா் காலனியை சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீன்பிடி தொழிலாளி. இவா் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

குழித்துறையில் சாஸ்தா கோயிலை இடிக்க எதிா்ப்பு

குழித்துறை நீதிமன்றம் அருகேயுள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலை இடித்து அகற்ற எதிா்ப்பு தெரிவித்து இந்து இயக்கங்களின் நிா்வாகிகள் வியாழக்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழித்துறை நீதிமன்றம் அருகேயுள்ள... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ... மேலும் பார்க்க

காந்தியடிகள் நினைவு தினம்: குமரி காந்தி மண்டபத்தில் ஆட்சியா் அஞ்சலி

காந்தியடிகளின் 78 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது படத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் கூறுகையில், ... மேலும் பார்க்க