எடுபடாமல் போன அனுதாபம், துரோகம்; உத்தவ், சரத் பவார் சாம்ராஜ்ஜியத்தை சரித்த ஷிண்ட...
காங்கயத்தில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
காங்கயத்தில் தினசரி சந்தை மற்றும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்பவா்கள், பயன்படுத்துபவா்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதோடு, அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் வழிகாட்டுதலின்படி, காங்கயம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தினசரி சந்தை மற்றும் திருப்பூா் சாலை பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, மொத்தம் ரூ.ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.