காசநோய் விழிப்புணா்வு பேரணி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரசாரம் 100-ஆவது தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அரசு மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணி பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூா் சாலை வழியாகச் சென்று அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.
இதில் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் காசநோய் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா். காசநோய் மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் சுந்தரலிங்கம், நெஞ்சக நோய் மருத்துவ துறைத் தலைவா் சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் துறை உதவி பேராசிரியா் சந்திரிகா, உதவி உறைவிட மருத்துவ அலுவலா் கரோலின், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், சுவாச
சிகிச்சையாளா் பயிற்சி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் துறை, மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலா்கள் செய்திருந்தனா்.