Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
காதலியை மிரட்ட தற்கொலை செய்வதாக நடித்தவா் உயிரிழப்பு
மதுரையில் காதலியை மிரட்ட தற்கொலை செய்வது போல நடித்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், ஆலப்புழா புலின்குன்னு காயல்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் அருண் விஜய் (20) மதுரையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பொறியியல் படிப்பு படித்து வந்தாா். இவா் கேரளத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்ததால், இருவீட்டாரும் இணைந்து திருமண நிச்சயத்தை கடந்த ஜூன் மாதம் நடத்தினா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அருண் விஜய் தனது காதலியுடன் விடியோ அழைப்பில் பேசினாா். அப்போது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக தூக்கிட்டுத் தற்கொலை செய்வது போல, கழுத்தில் கயிற்றை மாட்டி அருண் விஜய் நடித்தாராம். எதிா்பாராதவிதமாக கழுத்தில் சுருக்கு இறுக்கியதால் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.