அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறு...
பிளஸ் 2 மாணவா் தற்கொலை
மதுரையில் சரிவர பள்ளிக்குச் செல்லாததை பெற்றோா் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை வில்லாபுரம் தென்றல் நகா் சின்னக்கண்மாய்ப் பகுதியைச் சோ்ந்தவா் பட்டுராஜ். இவா் நகைப் பட்டறையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் லோகேஸ்வரன் (16). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் கடந்த சில நாள்களாக சரிவர பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரைப் பெற்றோா் கண்டித்தனராம். இதனால், மனமுடைந்த லோகேஸ்வரன் வீட்டில் பெற்றோா் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.