செய்திகள் :

கார்த்திகையில் வழிபட வேண்டிய 5 தெய்வங்கள் - தோஷங்கள் நீக்கும் வழிபாடு

post image
திருக்கார்த்திகை என்றால் எல்லோருக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழாதான் நினைவுக்கு வரும். அன்று அருணாசலேஸ்வரரை வழிபடுவதுபோல, திருக்கார்த்திகையில் விசேஷமாக விழாக் காணும் வேறு சில தெய்வங்களையும் தரிசித்து மகிழ்வோம்!

அர்த்தநாரீசுவரர்: அம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப் பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார். தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித்துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது. அர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. அர்த்தநாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.

கார்த்திகை

கார்த்திகைப் பெண்கள்: நட்சத்திரங்களை விண்மீன் என்பர். கடலில் மின்னிச் சதா சுழன்றுகொண்டிருக்கும் மீன்களைப் போல வானத்தில் பிரகாசித்துக்கொண்டு, இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதால், நட்சத்திரங்களை விண்மீன் என்று அழைக்கிறோம். கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை இலக்கியங்கள் அறுமீன் என்று அழைக்கின்றன. இந்த மீன்கள் வளர்த்த செல்வனாக இருப்பதால் முருகனுக்கும் ‘மீனவன்’ என்பது பெயராயிற்று.

கார்த்திகை போரைக் குறிக்கும் நட்சத்திரமாகும். வெற்றியை விரும்புபவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை  வணங்கி விரதமிருந்து வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

கார்த்திகேயன்: முருகப்பெருமானின் வளர்ப்புத் தாய்மார்களான கார்த்திகைப் பெண்கள், நம் இல்லங்களுக்கு வருவதைப் பெண்கள் விளக்கேற்றி வரவேற்பதே தீபத் திருவிழாவாகும் என்பர் சிலர். அவர்களுடன் முருகனும் வருகிறான். அவர்கள் நமக்கு வாழ்வில் வளமையையும் செல்வத்தையும் தருகின்றனர். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதாளல், முருகனுக்குக் கார்த்திகேயன் என்பது பெயராயிற்று. 

கொற்றவை: கொற்றவையாகிய துர்கைக்கும் கார்த்திகா என்பது பெயர். துர்கை அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னி மயமானவள். அதனால், அவள் கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக வீற்றிருக்கிறாள். கார்த்திகாவான துர்கையின் புதல்வன் ஆதலாலும், முருகனுக்குக் கார்த்திகேயன் எனும் பெயர் வந்தது என்பார்கள். ஆக, திருக்கார்த்திகையில் துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவதால் நம் துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.

காரத்திக்கேயன்

சூரிய தேவன்: கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால், `விருச்சிக மாதம்’ என்பர். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரைச் சொத்துக்களால் பயன் உண்டாகும். அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.

புண்ணியம் நிறைந்த தீபத் திருநாளில் இந்தக் கார்த்திகை தெய்வங் களை வழிபடுவோம்; இவர்களின் திருவருளால், சகலவிதமான சாபமும் தோஷங்களும் விலகும். இன்னல்கள் நீங்கி வாழ்வில் ஒளி பெருகும்.

சேற்றாண்டி வேடமிட்டால் நோய்கள் நீங்கும்; விவசாயம் செழிக்கும் - கொடைக்கானலில் வினோதத் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் ‌ கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தாண்டிக்குடி கிராமம் முக்கியமானது. இந்த கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன்,ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் 22வது உற்சவ விழா நேற்று... மேலும் பார்க்க

ஐயப்பனை தரிசிக்கும் Sathiq Ali | அழுதா ஏறும்போது நிகழ்ந்த அற்புதம் | Vikatan

சாதிக் அலி, மாற்றுமதம் சார்ந்த அன்பர். ஐயப்பன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தி காரணமாக மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். ஐயப்பன் மீதான பக்தி அவரை மீண்டும் மீண்டும் சபரிமலைக்குச் ச... மேலும் பார்க்க