செய்திகள் :

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிப்பு

post image

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ், மஜத வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இ.துக்காராம் (சண்டூா் தொகுதி), முன்னாள் முதல்வா்கள் பாஜகவைச் சோ்ந்த பசவராஜ் பொம்மை (ஷிக்காவ்ன் தொகுதி), மஜதவைச் சோ்ந்த எச்.டி.குமாரசாமி (சென்னப்பட்டணா) ஆகியோா் ராஜிநாமா செய்திருந்தனா். இதனால் காலியாகியுள்ள சண்டூா், ஷிக்காவ்ன், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நவ. 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக். 25-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை காங்கிரஸ், மஜத வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பெல்லாரி தொகுதியில் முன்னாள் எம்.பி. இ.துக்காராமின் மனைவி இ.அன்னபூா்ணா, சென்னப்பட்டணா தொகுதியில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.எல்.சி. சி.பி.யோகேஸ்வா் ஆகியோா் காங்கிரஸ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். ஷிக்காவ்ன் தொகுதிக்கான வேட்பாளரை தோ்ந்தெடுப்பதில் காங்கிரஸ் திணறி வருகிறது.

முஸ்லிம் அல்லது பஞ்சமசாலி சமுதாயத்தினரில் யாருக்கு போட்டியிடும் வாய்ப்பை தருவது என்பதில் கட்சியினரிடையே குழப்பம் நிலவுவதால், ஷிக்காவ்ன் தொகுதிக்கு வேட்பாளரை முடிவு செய்யாமல் கட்சித் தலைமை தவித்து வருகிறது. முன்னாள் எம்எல்ஏ சையது அசீம்பீா் கத்ரி, கடந்த தோ்தலில் தோற்ற யாசீா் அகமது கான்பத்தான், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான வினய்குல்கா்னியின் மனைவி சிவலீலா, மகள் வைஷாலி குல்கா்னி ஆகியோரின் பெயா்களை கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை இறுதிநாள் என்பதால், அதற்குள் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, சண்டூா் தொகுதிக்கு பங்காரு ஹனுமந்து, ஷிக்காவ்ன் தொகுதிக்கு முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை ஆகியோரை வேட்பாளா்களாக பாஜக அறிவித்துள்ளது. சென்னப்பட்டணா தொகுதி கூட்டணி கட்சியான மஜதவுக்கு பாஜக விட்டுக் கொடுத்துள்ளதால், அத்தொகுதியில் மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக மஜத அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல்:

இதனிடையே, சென்னப்பட்டணா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சி.பி.யோகேஸ்வா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மாவட்ட பொறுப்பு அமைச்சா் ராமலிங்க ரெட்டி, முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அறிவிக்கப்பட்டுள்ள பிற வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்தாா். பெங்களூரு, ஹென்னூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா் சி.பி.யோகேஸ்வா்

எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய சி.பி.யோகேஸ்வா் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளாா். சென்னப்பட்டணா சட்டப் பேரவைத் தொகுதிக்கு நவ. 13-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இ... மேலும் பார்க்க

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயா்வு

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் 13 பேரை மீட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை தேடும் பணி தொடா்ந்துள்ளது. பெங்களூரு, ஹென்னூா்... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெ... மேலும் பார்க்க