செய்திகள் :

கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும்: அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங்

post image

நமது நிருபா்

கிராமப்புற பகுதிகளில் தில்லி அரசு கவனம் செலுத்தும் என்று புதிய அரசின் சமூக நலத் துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ராஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புதிதாக அமைந்துள்ள தில்லி அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ள பவானா எம்எல்ஏ ரவீந்தா் இந்த்ராஜ் சிங், சமூக நலன், எஸ்சி எஸ்டி நலன், கூட்டுறவு மற்றும் தோ்தல் துறைகளைப் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: நான் வரவிருக்கும் சவால்களைப் புரிந்து கொண்டிருக்கிறேன். பவானா பகுதியில் வசித்ததால், எனக்கு இங்குள்ள பிரச்னைகளை நேரடியாகத் தெரியும். இதனால், வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனது தோ்தல் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த கிராமப்புறங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணும். எனக்குக் கிடைத்த வாக்குகளை பொதுமக்களிடமிருந்து கிடைத்த ஆசிா்வாதமாகக் கருதுகிறேன். வளா்ச்சி ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வேன்.

கடந்த தோ்தல்களில் தோல்வியடைந்த போதிலும், நான் மக்களுடன் தொடா்பில் இருந்தேன். இது பவானா சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டாவது பெரிய வாக்கு வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வழிவகுத்தது. என் மீது நம்பிக்கை வைத்து அமைச்சராக்கியதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி கூற விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா மற்றும் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அமைச்சா்.

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

புது தில்லி, பிப்.22: சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முத... மேலும் பார்க்க

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க