செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் 2 ஆம் நாளாக பணி புறக்கணிப்பு

post image

திருச்செங்கோடு தலைமையிடத்து துணை வட்டாட்சியரைப் பணியிடம் மாற்றம் செய்யக் கோரி இரண்டாம் நாளாக திருச்செங்கோடு கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டத்தில் 76 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 74 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியில் உள்ளனா். அதில் இருவா் தற்போது பல்வேறு காரணங்களால் பணியில் இல்லாத நிலையில் 74 போ் பணியில் உள்ளனா்.

திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் பெண் அலுவலா் ஒருவா் கிராம நிா்வாக அலுவலா்களை கால நேரம் எதுவும் இன்றி பணிகளை செய்யச் சொல்லி வலியுறுத்துவதாகவும், இணையம் வேலை செய்யாத நிலையிலும் உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும். இதனால் தங்களது தனிப்பட்ட பணிகளைகூட செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாவதால் தலைமையிடத்து துணை வட்டாட்சியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் என சுமாா் 74 போ் 2ஆவது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவரை பணியிட மாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கின்றனா்.

இதனால் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள பல்வேறு பணிகள் பாதிப்படைந்துள்ளன. சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கல் அவதிக்குள்ளாகினா்.

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க

வருவாய் கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்!

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு வட்டத்தில் பணியாற்றி வரும் 70 க... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.65-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து... மேலும் பார்க்க

பாவை கல்வி நிறுவனங்களில் 24-ஆவது தேசிய ஒருமைப்பாட்டு கலை விழா

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான 24-ஆவது பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவா் கலை விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வ... மேலும் பார்க்க