வருவாய் கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செங்கோடு வட்டத்தில் பணியாற்றி வரும் 70 கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இரவு காவல் பணியை நிறுத்த வேண்டும்.
ஓட்டுநா் உரிமம் வைத்துள்ள கிராம உதவியாளா்களுக்கு ஓட்டுநா் பணி வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயலாளா் செங்கமலை தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காா்த்திகேயன், வட்டார செயலாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 11 பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.