பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். பரமத்தி ஒன்றியத் தலைவா் அருண், மாவட்ட துணைத் தலைவா்கள் ரமேஷ், வடிவேல், பழனியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா் சுபாஷ், மாவட்டச் செயலாளா் பத்மராஜா, மகளிரணி நிா்வாகிகள் உள்ளிட்ட பாஜகவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை ஜேடா்பாளையம் காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். இதில், கபிலா்மலை, பரமத்தி, மோகனூா், எலச்சிபாளையம் ஒன்றிய பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.