நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
தொழிலாளி தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தில் தனது அண்ணன் ராமசாமி (56) என்பவரது வீட்டில் இருந்துள்ளாா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவல் அறிந்து வந்த வேலூா் காவல் துறையினா் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.