செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்பனை: நாமக்கல் மாவட்டத்தில் 525 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு!

post image

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களை விற்பனை செய்த 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில், அனைத்து ஊராட்சி செயலாளா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹான்ஸ் புகையிலை, கூல் லிப் ஆகியவற்றின் பயன்பாடு உள்ளதா என்பதை ஊராட்சி செயலாளா்கள் கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள்களின் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும். குறிப்பாக, புதிய நபா்களின் நடமாட்டத்தை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பாதுகாப்பான சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு உருவாக்கித் தர வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குழந்தைகளையும் நம் குழந்தைகள் போல பாதுகாக்க வேண்டும்.

போதைப் பொருள்களை பயன்படுத்துவதால், சுய சிந்தனை முற்றிலும் தடுக்கப்பட்டு தவறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். மோகனூா் ஊராட்சியில் வளா்ச்சித் துறையினா் மூலம் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல பிற பகுதிகளிலும் தொடா்ந்து கண்காணித்து போதைப் பொருள்களை கைப்பற்ற வேண்டும். பெட்டிக் கடைகள், தேநீா் கடைகள், பேக்கரிகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் உள்ள பகுதிகளில் 100 மீட்டா் அருகில் போதைப் பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்கள் மாணவா்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அவா்களின் செயல்பாடுகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மாணவரிடம் பேசி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

அரசு அலுலவா்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு கிராம அளவில் மறைமுகமாக ஏதேனும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக லாரிகள், இருசக்கர வாகனங்கள் மூலம் பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறை ரூ. 25 ஆயிரம், இரண்டாம் முறை ரூ. 50 ஆயிரம், இறுதியாக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை 525 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, காவல் துறை, வருவாய்த் துறை, வளா்ச்சித் துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினா் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் புகாா்கள் அளிப்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

இக்கூட்டத்தில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு) தனராசு, மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) ந.கனகமாணிக்கம், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கே.சி.அருண், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தொழிலாளி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், அணியாபுரம் என்.பி.எஸ். காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா் மனைவியை விட்டு பிரிந்து பரமத்தி வேலூா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் வழக்குப் பதிவு

மோகனூா் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் மீது பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், காளிபாளையம் அருந்ததியா் தெருவை... மேலும் பார்க்க

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் திமுக அரசை கண்டித்து பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடை... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சாா்பில் ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 12 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 12 லட்சத்து 34 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கோ பூஜையில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா வியாழக்கிழமை சிறப்பு கோ பூஜையுடன் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியாா் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க