EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!
கிளியாற்று வெள்ளத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: 25 பயணிகள் பத்திரமாக மீட்பு
மதுராந்தகம் அருகே தச்சூா் கிராமத்தின் வழியாக செல்லும் கிளியாற்றின் வெள்ளத்தில் சிக்கிய தனியாா் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா்.
செங்கல்பட்டு - பவுஞ்சூா் வழியாக தனியாா் பேருந்து தச்சூா் வழியாக செங்கல்பட்டு நோக்கி வெள்ளிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. தச்சூா் அருகே உள்ள சகாய நகா் அருகே மதுராந்தகம் ஏரியில் இருந்து சுமாா் 8,000 கன அடி தண்ணீா் பாய்ந்து சென்றது.
இந்த வெள்ள நீரில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியாா் பேருந்து சிக்கியது. வெள்ளத்தைப் பாா்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்துடன் கூச்சலிட்டனா். இதை அறிந்த அப்பகுதி மக்களும் மதுராந்தகம் தீயணைப்பு மீட்புக் குழுவினா்களும் விரைந்து பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
வெள்ளம் அதிவேகமாக சென்ால், கயிறு கட்டி ஒவ்வொரு பேராக மீட்கப்பட்டனா். அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பேருந்தை மீட்க முடியவில்லை.
அந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.