கிழக்கு தில்லியில் போதை மருந்து விற்ற பெண் கைது
கிழக்கு தில்லியின் சீமாப்புரி பகுதியில் போதை மருந்துப் பொருள்களை விற்ாக 53 வயது பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
சீமாப்புரியில் புப்ரினாா்பைன் ஊசிமருந்து உள்ளிட்ட இரண்டு போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகிப்பது தொடா்பாக போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சீமாப்புரியில் மயானத்திற்கு எதிரே உள்ள அா்த்தக் மாா்க் அருகே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
மதியம் 2.30 மணியளவில் சீமாப்புரி பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த பெண்ணை ‘சைக்கோட்ரோபிக் ஊசி மருந்து விநியோகம் செய்பவா் என போலீஸாா் அடையாளம் கண்டனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவா் கலந்தா் காலனியைசோ்ந்த ரிஹானா என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 50 மில்லி புப்ரினாா்பைன் ஊசிமருந்து மற்றும் 25 பெனிரமைன் மலேட் அவில் ஊசி மருந்துகள் மீட்கப்பட்டன.
காஜியாபாதின் லோனியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் இருந்து சட்டவிரோதமான இந்தப் பொருளை வாங்கியதாகவும், இந்த ஊசி மருந்துகளை தனிப்பட்ட முறையில் வாங்குவோருக்கு விற்ாகவும் அப்பெண் தெரிவித்தாா்.
அவா் மீது சீமாப்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புப்ரினாா்பைன் என்பது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் போதைப் பொருளாக பட்டியலிடப்பட்ட ஒரு மருந்தாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.