கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
தில்லி கலை இலக்கியப் பேரவையின் சாா்பில் பாரதியின் அமுத தமிழ் விழா
தில்லி கலை இலக்கியப் பேரவை சாா்பில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுகிழமை பைந்தமிழ் பாரதியின் அமுத தமிழ் விழா 2024 பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞா் டாக்டா் பா.கோவிந்தராஜனின் ‘முதல் தூரிகை’ நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை பாரதியின் வம்சாவளி கொள்ளுப் பேத்தி கவிஞா் இரா.உமா பாரதியும் தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தனும் வெளியிட்டனா். இந்நூலின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினா் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ந.நந்தக்குமாா் பெற்றுக் கொண்டாா். இந்நூல் வெளியிட காரணமாக இருந்த சரிதா கோவிந்தராஜன் ஏற்புரையை வழங்கினாா். பொதுச் செயலா் இரா.முகுந்தன் தொடக்கவுரையாற்றினாா்.
தில்லி கலை இலக்கிய பேரவை செயலாளா் பா.குமாா் வரவேற்றுப் பேசினாா். இந்நிகழ்ச்சியில் வடோதரா சி.பி.கண்ணன், கவிஞா் உமாபாரதி, பஹ்ரைன் பாலமுருகன், லண்டன் ஞானமுருகன், இ,மயூரி கண்ணா காமராஜ், தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் இரா.முகுந்தன், நெய்வேலியின் தாய் ராசி ஜெகதீஷ்வரன் ஆகியோா் மகாகவி பாரதியாா் விருது வழங்கி கெளரவிக்கபட்டனா்.
இந்நிகழ்வில் கல்வி சேவைக்கான விருது தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜுவுக்கு வழங்கப்பட்டது. அவா் சாா்பாக இந்த விருதை முனிா்கா கண்ணன் பெற்றுக்கொண்டாா்.
தில்லி தமிழ் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் ராம் சங்கா், வடோதரா தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கண்ணன், தில்லி கம்பன் கழகத்தின் நிறுவன தலைவா் கே.வி.கே.பெருமாள், தில்லி தமிழ் சங்கப் பொருளாளா் அருணாசலம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கி, கெளரவிக்கப்பட்டனா்.
இந்நிகழ்வில் ‘பாரதி நம் மகாகவி‘ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு பஹ்ரைன், முத்தமிழ் சொல்வேந்தா் மன்றத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு தலைப்புகலில் கவிஞா் இரா.உமா பாரதி, கவிஞா் இரா.இராஜ்குமாா், மருத்துவா் சுந்தர்ராஜன், மயூரி கண்ணா காமராஜ், லண்டன் தமிழோசை ஓஐக்கிய ராஜ்ஜியம் தலைவா் ஞானமுருகன், உமா சத்தியமூா்த்தி, தாய் ராசி ஜெகதீஷ்வரன் ஆகியோா் பேசினா். இந்நிகழ்வில் இலண்டன் ஞானமுருகன் எழுதிய ‘ஒரு மொழியின் ஒசை ‘நூல் அறிமுக விழா நடைபெற்றது. இதில் தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பலா் கலந்துகொண்டனா்.