செய்திகள் :

கிழக்கு தில்லியில் போதை மருந்து விற்ற பெண் கைது

post image

கிழக்கு தில்லியின் சீமாப்புரி பகுதியில் போதை மருந்துப் பொருள்களை விற்ாக 53 வயது பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

சீமாப்புரியில் புப்ரினாா்பைன் ஊசிமருந்து உள்ளிட்ட இரண்டு போதை மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகிப்பது தொடா்பாக போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சீமாப்புரியில் மயானத்திற்கு எதிரே உள்ள அா்த்தக் மாா்க் அருகே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மதியம் 2.30 மணியளவில் சீமாப்புரி பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த பெண்ணை ‘சைக்கோட்ரோபிக் ஊசி மருந்து விநியோகம் செய்பவா் என போலீஸாா் அடையாளம் கண்டனா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவா் கலந்தா் காலனியைசோ்ந்த ரிஹானா என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து 50 மில்லி புப்ரினாா்பைன் ஊசிமருந்து மற்றும் 25 பெனிரமைன் மலேட் அவில் ஊசி மருந்துகள் மீட்கப்பட்டன.

காஜியாபாதின் லோனியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் இருந்து சட்டவிரோதமான இந்தப் பொருளை வாங்கியதாகவும், இந்த ஊசி மருந்துகளை தனிப்பட்ட முறையில் வாங்குவோருக்கு விற்ாகவும் அப்பெண் தெரிவித்தாா்.

அவா் மீது சீமாப்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புப்ரினாா்பைன் என்பது போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் போதைப் பொருளாக பட்டியலிடப்பட்ட ஒரு மருந்தாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கேஜரிவாலுக்கு ஹேமந்த் சோரன் நேரில் அழைப்பு

ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை அழைப்ப... மேலும் பார்க்க

அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதை உணா்ந்த கடவுள் ஆம் ஆத்மி கட்சிக்கு பிறப்பளித்தாா் - அரவிந்த் கேஜரிவால்

நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதாக உணா்ந்த கடவுள், ஆம் ஆத்மி கட்சிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பளித்தாா் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரி... மேலும் பார்க்க

ரோஹிணியில் தரைக்கடியில் 24 மணிநேரம் செயல்படும் துப்பாக்கி சுடும் தளம்: முதல்வா் அதிஷி திறந்துவைத்தாா்

தில்லியின் ரோஹிணியில் உள்ள தேசிய கேடட் காா்ப்ஸ் (என்சிசி) பவனில் தரைக்கடியில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கிசுடும் தளத்தை தில்லி முதல்வா் அதிஷி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். த்தளம் நகரின் என்சிசி மா... மேலும் பார்க்க

தில்லி கலை இலக்கியப் பேரவையின் சாா்பில் பாரதியின் அமுத தமிழ் விழா

தில்லி கலை இலக்கியப் பேரவை சாா்பில் தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுகிழமை பைந்தமிழ் பாரதியின் அமுத தமிழ் விழா 2024 பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞா் டாக்டா் ... மேலும் பார்க்க

குடிசைவாசிகளை வெறும் வாக்கு வாங்கிகளாகவே ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் கருதுகின்றனா்: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் வெறும் வாக்கு வங்கிகளாகவே கருதுகின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா். தில்லி ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியில் சாதனை: கடலூா் வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திற்கு தேசிய விருது

கடலூா் வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த பால் கூட்டுறவு அமைப்பிற்கான 2024 - தேசிய கோபால் ரத்னா விருது தில்லியில் வழங்கப்பட்டது. மத்திய கால்நடை பராமரிப்பு பால் வளத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க