இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
குடியிருப்பு பகுதியிலேயே குப்பைகள் கொட்டி எரிப்பு: தில்லை நகா் மக்கள் வேதனை
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், தில்லைநகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு அங்கேயே எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தில்லை நகா் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தில்லை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தில்லை நகரின் பிரதான சாலையில் தினமும் கொட்டி விட்டு அங்கேயே தீ வைத்து எரிக்கின்றனா். இதனால் அப்பகுதிகளில் புகை பரவி தொற்றுநோய் ஏற்படும் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நிலத்தடி நீா் மாசடையவும் வாய்ப்பு உண்டு.
இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்துக்கு பலமுறை நேரில் சென்றும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு குப்பைகளை கொட்டுவதையும், அங்கே எரிப்பதையும் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.