பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!
குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்திற்கான வணிகமும் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!
முக்கியமாக, உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டு வருகிறதாம்.
புஷ்பா, புஷ்பா - 2 படங்களைத் தயாரித்த மைத்ரி மூவிஸுக்கு குட் பேட் அக்லியே முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.