குன்னூா், கோத்தகிரியில் மூடுபனி
உதகை, நவ. 8: குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை கடும் மூடுபனி காணப்பட்டதால் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் இயக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழையுடன் மூடு பனி காணப்பட்டது.
இந்நிலையில் குன்னூா், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை கடும் மூடு பனி காணப்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். இந்த மூடுபனியினால் குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.