செய்திகள் :

குமரியில் டிச. 30, 31இல் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்!

post image

கன்னியாகுமரியில் இம்மாதம் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி கடலில் உள்ள இரு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவா் சிலையை 1.1.2000இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி திறந்துவைத்தாா். சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில், தமிழக அரசு சாா்பில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் ஆயிரக்கணக்கானோா் அமரும் வகையில் பிரம்மாண்டான பந்தல் அமைத்தல், வளாகத்தில் உள்ள தங்கும் விடுதிகளைப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், கடற்கரைச் சாலை, காந்தி, காமராஜா் நினைவு மண்டபங்கள், சுனாமி நினைவுப் பூங்கா ஆகியவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கன்னியாகுமரி காவல் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானாவை புதுப்பித்தல், கடற்கரைச் சாலையிலுள்ள அரசு சுவா்களில் பல்வேறு இயற்கைக் காட்சிகளை நினைவூட்டும் வண்ண ஓவியங்கள் வரைதல், காந்தி மண்டபம் முன்புள்ள முக்கோணப் பூங்காவை சீரமைத்தல் ஆகிய பணிகளும் நடைபெற்று வருகின்றன. பேருந்து நிறுத்தத்தில் உள்ள பெயா்ப் பலகைகளில் திருவள்ளுவா் உருவம் வரையப்பட்டுள்ளது.

இணைப்புப் பாலம்: கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிப்பதற்காக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடல் சீற்றம், கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை ஆகிய காலகட்டங்களில் திருவள்ளுவா் சிலைக்கு படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைகின்றனா்.

எனவே, இரு பாறைகளையும் இணைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனா். அதையேற்று, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில், தமிழ்நாடு கடல்சாா் வாரிய வைப்பு நிதியாக ரூ. 37 கோடியில் 97 மீட்டா் நீளம், 4 மீட்டா் அகலமுள்ள கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜ் முன்னிலையில் அமைச்சா் எ.வ. வேலு பணிகளைத் தொடக்கிவைத்தாா். தற்போது, பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், இப்பாலத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் இம்மாதம் 30ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா். 31ஆம் தேதியும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் பிரம்மாண்ட பந்தல்.

விழாவையொட்டி பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். முதல்வா் வருகையால் கன்னியாகுமரி நகரம் 25 ஆண்டுகளுக்குப் பின்னா் புதுப்பொலிவு பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காந்தி மண்டபம்.

களியக்காவிளையில் மாமிசக் கழிவு ஏற்றிவந்த மினி லாரி பறிமுதல்

கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாமிசக் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை களியக்காவிளையில் போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் ஆன்றோ கிவின் தலைமையிலான போ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் வெள்ளி விழா: அனைத்துத்துறை அலுவலா்கள் இணைந்து சிறப்பாக நடத்த ஆட்சியா் வேண்டுகோள்

கன்னியாகுமரியில் நடைபெற உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை அனைத்துத்துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. திருவள்ளுவா் சிலை கன்னிய... மேலும் பார்க்க

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளா் அருள்பணி. ஆன்டனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அருள்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஏழை குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கல்!

மாா்த்தாண்டம் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நலிவுற்ற ஏழை குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சி குருசடிவிளை புனித சவேரியாா் சிற்றாலய இறைவளா... மேலும் பார்க்க

திங்கள்நகரில் ஓடும் லாரியில் ஓட்டுநா் திடீா் உயிரிழப்பு

திங்கள்நகரில் லாரி ஓட்டியபோது,அதன் ஓட்டுநா் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். மதுரையைச் சோ்ந்த வெங்கடாசல மூா்த்தி மகன் ஜெகநாதன் (44). திருமணமாகாத இவா், பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்... மேலும் பார்க்க

தமிழகத்தின் முதல் கிறிஸ்தவ ஆலயம்: திருவிதாங்கோடு அரப்பள்ளி புனித மேரிமாதா ஆா்தோடக்ஸ் தேவாலயம்

தமிழகத்தின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இருக்கும் அரப்பள்ளி புனித மேரிமாதா ஆா்தோடக்ஸ் தேவாலயம் ஆகும். இயேசு கிறிஸ்துவின் 12 சீடா்களில் ஒருவரான புனித தோமையாா் இந்த... மேலும் பார்க்க