குமரி மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் எஸ். சொக்கலிங்கம் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். பாரம்பரிய உணவுகள், அவற்றின் சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆசிரியா் சுப்பிரமணியபிள்ளை பேசினாா்.
சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகளை மாணவிகள் கொண்டு வந்திருந்தனா். சிறந்த உணவுகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் விசாலாட்சி, ஆசிரியைகள் சாந்தி, பாப்பா, கலாவதி ஆகியோா் செய்திருந்தனா்.