போலி பணி ஆணை; ரூ.99 லட்சம் மோசடி... கைதான ஊராட்சி மன்றத் தலைவி - காங்கிரஸில் சலச...
குமார் வேம்புவின் முதல் பார்ட்னர்ஸிடமிருந்து ரூ. 3.3 கோடி நிதி பெற்ற பான்ஹெம் வென்ச்சர்ஸ்!
குமார் வேம்புவால் நிறுவப்பட்ட முதல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரூ. 3.3 கோடி நிதியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலான ஸ்டார்ட்அப் தமிழா நிகழ்ச்சிக்காக இந்த நிதியை பான்ஹெம் வென்ச்சர்ஸ் வாங்கியுள்ளது.
தொழில்நுட்ப துறையின் தலைவர்களுள் ஒருவரான குமார் வேம்புவால் சமீபத்தில் நிறுவப்பட்ட "முதல் பார்ட்னர்ஸ்" என்ற முதலீட்டு நிறுவனம் முதல்முறையாக பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளது.
பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் எல். ஹேமச்சந்திரன், ஆர். பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கினர்.
உறுதியான குறிக்கோள் உணர்வுகொண்ட அடுத்த தலைமுறை புத்தாக்குனர்களாகவும் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குனர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்து வளர்ச்சி காண செய்வதே இந்த முதலீட்டு நிறுவனத்தின் குறிக்கோளாகும்.
இந்நிறுவனம் முதன் முறையாக தொடங்கியிருக்கும் பிரபல பிசினஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார்ட் அப் தமிழா, பல்வேறு தொழில் துறை தலைவர்களிடமிருந்து மூன்று சீசன்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான வாக்குறுதியை ஏற்கனவே பெற்றுள்ளது.