சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் அகில பாரத இந்து மகா சபா மனு
கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அகில பாரத இந்து மகா சபா சாா்பில் திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
அகில பாரத இந்து மகா சபா சாா்பில் மாநில பொதுச்செயலா் ராம நிரஞ்சன் மற்றும் நிா்வாகிகள் கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் அளித்த மனு விவரம்:
திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க வேண்டும். மலை அருகே மாமிசம் சாப்பிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லாததால் மனுவாகக் கொடுத்துள்ளோம். இம்மனுவை முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளனா். இதில், தஞ்சாவூா் மண்டல பொதுச் செயலா் இந்திரஜித் (எ) செல்வா, மாவட்டப் பொதுச்செயலா் தட்சிணாமூா்த்தி, கும்பகோணம் மாநகரச் செயலா் சூரிய பிரகாஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு நகரச்செயலா் விக்னேஷ், டெல்டா மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.